Friday, December 3, 2010

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 03

இரண்டாவது பதிவர் சந்திப்பு நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகின்றது. இந்த கால எல்லைக்குள் நம்மிடையே குட்டி சந்திப்புகள் அவ்வப்போது நடந்திருந்தாலும் அனைத்துப் பதிவர்களும் சந்திக்கும் பாரிய சந்திப்புகள் ஒன்றும் நடைபெறாதது கவலைக்குரியதே. இக்குறையை ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும் பொருட்டு பதிவர் சந்திப்பொன்றை நடாத்த முன்வந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பதிவர்கள், புதிய பதிவர்கள், பதிவுலகத்தை உற்றுநோக்குபவர்கள்(வாசகர்கள்) ஆகிய அனைவரும் கலந்து கொள்ளலாம். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு

இடம்: கைலாசபதி அரங்கு,
            தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
            காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06
காலம்: 19ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.31 மணி

நிகழ்ச்சி நிரல்


  • அறிமுகவுரை

  • பதிவர்கள் அறிமுகம்

  • கலந்துரையாடல் 1 - கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.

  • கலந்துரையாடல் 2 - தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.

  • இடைவேளையில் இன்னிசை.

  • கலந்துரையாடல் 3 - பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.

  • கலந்துரையாடல் 4 - பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.

  • பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.

  • நன்றியுரை.

இதுவரை குழுமத்திலேயோ அல்லது பேஸ்புக்கிலேயோ உறுதிப்படுத்தாதவர்கள் இங்கு பின்னூட்டப்பெட்டியிலும் உறுதிப்படுத்தலாம். இயலுமானவரை விரைவாக உறுதிப்படுத்தவும். இம்முறை ஏற்பாட்டுக்குழுவினர்
நிரூஜா, வதீஸ், அனுதினன், அஷ்வின், பவன்.

பி.கு – வெளியிடங்களிலிருந்து வருவோர் தங்குமிட வசதிகள் தேவைப்படின் பதிவர் அஷ்வினை 13ம் திகதிக்கு முதல் தொடர்புகொண்டால் உரிய வசதிகளைச் செய்து தரமுடியும்.


இது பதிவர்களால் பதிவர்களுக்கு நடாத்தப்படும் சந்திப்பு எனவே சந்திப்புத் தொடர்பான தட்டிகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது, அவற்றை உங்கள் வலைப்பூக்களில் இட்டு சந்திப்புக்கு ஆதரவு வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
தட்டிகளைப்பெற இங்கே சொடுக்குங்கள்.

Friday, December 4, 2009

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - இரண்டு

மார்கழித் திங்களி்ன் மதிநிறைந்த நன்னாளொன்றில் இதோ எமது இரண்டாவது பதிவர் சந்திப்பு வந்துவிட்டது. முதலாவது பதிவர் சந்திப்பின் நினைவுகள் முழுமனதும் பரவிக்கிடக்க, அடுத்தது நிறைக்க வருகிறது.

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இவ்வினிய சந்திப்பு
571/15, காலி வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு-06 இல் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2 மணிமுதல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

சென்ற சந்திப்பு குறித்த நேரத்திலும் பார்க்க 9 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்திருந்து. ஒப்பீட்டு ரீதியில் அது எங்களுக்கு நல்ல ஒரு பெயரைத் தக்க வைத்திருக்கிறது. இம்முறை குறித்த நேரத்திற்கே சந்திப்பு ஆரம்பித்து எமது பெயரைத் தக்கவைத்துக்கொள்ள பதிவர்களாகிய நாங்கள்தான் உதவப்போகின்றோம். பிற்பகல் 2 மணிக்கு முன்னமே வந்து இச்சந்திப்பை மகிழ்வாக்கிக் கொள்வோம்.

இம்முறைக்கான நிகழ்ச்சி நிரல் இதோ கீழே...

  1. - அறிமுகவுரை - 5 நிமிடம்
  2. - பதிவர்கள் அறிமுகம் --- பதிவர்கள் தங்களைப் பற்றிய சிறு அறிமுகம்
  3. - கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல் --- பதிவுகளின் தன்மை, எவ்வாறது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறதை மேம்படுத்துவது போன்றன.
  4. - கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை --- காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன
  5. - சிற்றுண்டியும் சில பாடல்களும் --- வாய்க்குச் சுவையாக சில பலகாரஙகள், செவிக்கினிமை சேர்க்க சில பாடல்கள்
  6. - கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு
  7. சிறப்பாகப் பயன்படுத்துவது? --- குழுமத்தை எவ்வாறு பாவிக்கவேண்டும், எவ்வாறு பாவிக்கக் கூடாது
  8. - கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும் --- பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் அதற்கான இருக்கக்கூடிய தீர்வுகளும்,
  9. - பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி --- கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள்அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்
  10. - உங்களுக்குள் உரையாடுங்கள் --- கதைக்க விடயம் இல்லையெனும் வரை பதிவர்கள் மாறி மாறித் தங்களுக்குள் கதைத்து, சிரித்து மகிழ்தல்


இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இலங்கைப் பதிவர்களே, இது பற்றித் தெரியாது இருக்கும் உங்களுக்குத் தெரிந்த பதிவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் அழைந்து வந்து இச்சந்திப்பை பயனுடையதாக்கி மகிழ்வோம்.

எங்களுடைய இனிய இச்சந்திப்பிற்கு நாங்கள் எல்லோரும் ஆளுக்கு நூறு ரூபாய்கள் செலுத்தி திறம்பட நாடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.

இச்சந்திப்பானது கீழ்வரும் சுட்டியில் சமுகமளிக்கமுடியாத பதிவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காக நேரடி ஒளிபரப்பாக காண்பிக்கப் பட இருக்கிறது.

http://www.livestream.com/srilankatamilbloggers

இதுபற்றிய மேலதிக விபரங்களை எங்களது குழுமமாகிய இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தில் பார்ப்பதற்கு மேலுள்ள படங்களில் சொடுக்குங்கள். மேலும் இலங்கைப் பதிவராகிய நீங்கள் இன்னும் இக்குழுமத்தில் சேரவில்லையாயின் உடனடியாகச் சேர்ந்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் பயனுற ஈடுபடுங்கள்.

மேலும் இப்பதிவுக்கு உங்கள் பின்னூட்டத்ததினை இடுவதன்மூலம் உங்கள் வருகையினை உறுதிப்படுத்துங்கள்.

- இலங்கைத் தமிழப் பதிவர்