Friday, December 4, 2009

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - இரண்டு

மார்கழித் திங்களி்ன் மதிநிறைந்த நன்னாளொன்றில் இதோ எமது இரண்டாவது பதிவர் சந்திப்பு வந்துவிட்டது. முதலாவது பதிவர் சந்திப்பின் நினைவுகள் முழுமனதும் பரவிக்கிடக்க, அடுத்தது நிறைக்க வருகிறது.

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இவ்வினிய சந்திப்பு
571/15, காலி வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு-06 இல் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2 மணிமுதல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

சென்ற சந்திப்பு குறித்த நேரத்திலும் பார்க்க 9 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்திருந்து. ஒப்பீட்டு ரீதியில் அது எங்களுக்கு நல்ல ஒரு பெயரைத் தக்க வைத்திருக்கிறது. இம்முறை குறித்த நேரத்திற்கே சந்திப்பு ஆரம்பித்து எமது பெயரைத் தக்கவைத்துக்கொள்ள பதிவர்களாகிய நாங்கள்தான் உதவப்போகின்றோம். பிற்பகல் 2 மணிக்கு முன்னமே வந்து இச்சந்திப்பை மகிழ்வாக்கிக் கொள்வோம்.

இம்முறைக்கான நிகழ்ச்சி நிரல் இதோ கீழே...

  1. - அறிமுகவுரை - 5 நிமிடம்
  2. - பதிவர்கள் அறிமுகம் --- பதிவர்கள் தங்களைப் பற்றிய சிறு அறிமுகம்
  3. - கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல் --- பதிவுகளின் தன்மை, எவ்வாறது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறதை மேம்படுத்துவது போன்றன.
  4. - கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை --- காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன
  5. - சிற்றுண்டியும் சில பாடல்களும் --- வாய்க்குச் சுவையாக சில பலகாரஙகள், செவிக்கினிமை சேர்க்க சில பாடல்கள்
  6. - கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு
  7. சிறப்பாகப் பயன்படுத்துவது? --- குழுமத்தை எவ்வாறு பாவிக்கவேண்டும், எவ்வாறு பாவிக்கக் கூடாது
  8. - கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும் --- பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் அதற்கான இருக்கக்கூடிய தீர்வுகளும்,
  9. - பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி --- கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள்அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்
  10. - உங்களுக்குள் உரையாடுங்கள் --- கதைக்க விடயம் இல்லையெனும் வரை பதிவர்கள் மாறி மாறித் தங்களுக்குள் கதைத்து, சிரித்து மகிழ்தல்


இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இலங்கைப் பதிவர்களே, இது பற்றித் தெரியாது இருக்கும் உங்களுக்குத் தெரிந்த பதிவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் அழைந்து வந்து இச்சந்திப்பை பயனுடையதாக்கி மகிழ்வோம்.

எங்களுடைய இனிய இச்சந்திப்பிற்கு நாங்கள் எல்லோரும் ஆளுக்கு நூறு ரூபாய்கள் செலுத்தி திறம்பட நாடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.

இச்சந்திப்பானது கீழ்வரும் சுட்டியில் சமுகமளிக்கமுடியாத பதிவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காக நேரடி ஒளிபரப்பாக காண்பிக்கப் பட இருக்கிறது.

http://www.livestream.com/srilankatamilbloggers

இதுபற்றிய மேலதிக விபரங்களை எங்களது குழுமமாகிய இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தில் பார்ப்பதற்கு மேலுள்ள படங்களில் சொடுக்குங்கள். மேலும் இலங்கைப் பதிவராகிய நீங்கள் இன்னும் இக்குழுமத்தில் சேரவில்லையாயின் உடனடியாகச் சேர்ந்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் பயனுற ஈடுபடுங்கள்.

மேலும் இப்பதிவுக்கு உங்கள் பின்னூட்டத்ததினை இடுவதன்மூலம் உங்கள் வருகையினை உறுதிப்படுத்துங்கள்.

- இலங்கைத் தமிழப் பதிவர்

65 comments:

  1. பதிவர் சந்திப்பு ஆரோக்கியமான ஒரு விடயம் என்பதுடன் மகிழ்ச்சியையும் தருகின்றது.
    என்ன ஒரு 10 நாள் பதிவர் சந்திப்பு முந்திவிட்டது. நான் எதிர்வரும் 22ஆம் நாள் நாடு திரும்புகின்றேன்.
    பறவாய் இல்லை மூன்றாவது சந்திப்பில் அனைவரையும் சந்திக்கின்றேன்.
    பதிவர் சந்திப்பு வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நான் வருகிறேன்

    ReplyDelete
  3. வருகை உறுதிப்படுத்தப்படுகிறது

    ReplyDelete
  4. எனது வரவையும் இங்கே பதிவுசெய்கிறேன்.

    ReplyDelete
  5. நானும் வருகிறேன்....

    (இந்தத் தளம் நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள்....)

    ReplyDelete
  6. இலங்கை தமிழ் வலைப் பதிவர் சந்திப்பு இனிதே நிகழ்ந்தேற வாழ்த்துக்கள்.

    தொலை தூரத்தில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமை எனக்கு வருத்தமே!

    ReplyDelete
  7. நானும் வருகிறேன்.

    ReplyDelete
  8. மன்னிக்கவும் நணபர்களே.... என்னால் வரமுடியாது பதிவர் சந்திப்பு பயனுள்ளதாய் அமைய வாழத்துக்கள்

    ReplyDelete
  9. அன்றைய சந்திப்பில் கழந்து கொள்ள இயலாவிட்டாலும் இனி வரும் காலங்களில் கண்டிப்பாக என் வரவும் இருக்கும்

    ReplyDelete
  10. நானும் வருவேன்.............................

    ReplyDelete
  11. நன்றி ! நான் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிபவர் நேரடி ஒளிபரப்பில் முடிந்தவரை இணைந்துகொள்கிறேன். நேரலை இணைப்பை தந்ததற்கு ஏற்பாட்டு குழுவினருக்கு எமது நன்றிகள்!
    பதிவர் சந்திப்பு பயனுள்ளதாய் அமைய எமது வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  12. பதிவர் சந்திப்பு இனிதே நிகழ்ந்தேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நான் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிபவர்.

    So, நேரடி ஒளிபரப்பில் முடிந்தவரை இணைந்துகொள்கிறேன்.

    நேரலை இணைப்பை தந்ததற்கு ஏற்பாட்டு குழுவினருக்கு நன்றிகள்! & பதிவர் சந்திப்பு பயனுள்ளதாய் அமைய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. தாமதமாக தான் வர முடியும் என நினைக்கிறேன் .... வரலாம் தானே....?

    ReplyDelete
  15. நானும் வாறன். ஜமாய்ப்போம்!!!

    ReplyDelete
  16. நான் வருகிறேன்

    ReplyDelete
  17. நானும் வாறன்.

    ReplyDelete
  18. விடுமுறை காலம் என்பதால் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய கட்டாய தேவை இருப்பதால் வர முடியவில்லை நண்பர்களே,சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,இணைப்பு அங்கே கைகொடுத்தால் நேரடி ஒளிபரப்பில் சந்திக்கலாம்.

    ReplyDelete
  19. பதிவர் சந்திப்பு
    சிறப்பாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. நானும் உள்ளேன்

    ReplyDelete
  21. அந் நேரம் 'தமிழ்ப்பிரியா' வின் 'காம்பு ஒடிந்த மலர்' புத்தக வெளியீட்டில் தலைமை தாங்கி நடாத்த வேண்டியிருப்பதால் கலந்து கொள்ள முடியாதிருக்கிறது.
    கலந்து கொள்ள முடியாததையிட்டு மிகவும் வருந்துகிறேன்.

    ReplyDelete
  22. வெளிநாட்டில் இருப்பதால் கலந்துகொள்ளமுடியாமைக்
    கு வருந்துகிறேன்.நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற என்
    மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. எனது வரவையும் இங்கே பதிவுசெய்கிறேன்.

    ReplyDelete
  24. நானும் வருகிறேன். எனது வரவையும் உறுதி செய்கிறேன்.

    ReplyDelete
  25. பதிவர் சந்திப்பு இனிதே நிகழ்ந்தேற வாழ்த்துக்கள்.தொலை தூரத்தில் இருப்பதால் கலந்து கொள்ள முடியாமை எனக்கு வருத்தமே!

    ReplyDelete
  26. நானும் வரலாம் என்டுருக்கிரன்

    ReplyDelete
  27. ஐந்துமணிக்கு தான் வர முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அநேகமாக சந்திப்பு அந்நேரம் நிறைவுபெற்றிருக்கும். எதற்கும் 4.45 -5மணியளவில் வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  28. செல்வன்December 7, 2009 at 8:17 PM

    நானும் வருவேன்

    ReplyDelete
  29. எதிர்பார்த்த சந்திப்பில் கலந்துகொள்ளமுடியமைக்குவருந்துகிறேன். முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
    அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  30. கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். சந்திப்பு சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. (நானும்) உள்ளேன் ஐயா!

    ReplyDelete
  32. நானும் வருகிறேன். எனது வரவையும் உறுதி செய்கிறேன்.

    ReplyDelete
  33. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. நான் வெளிநாட்டில் உள்ளமையால் தவறாமல் நேரடி ஒளிபரப்பில் இணைவேன்

    ReplyDelete
  35. வரமுடியாமைக்கு வருந்துகிறேன்!
    சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  36. நானும் வருகிறேன்

    ReplyDelete
  37. நானும் வருகிறேன்

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள்! நான் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிபவர் நேரடி ஒளிபரப்பில் முடிந்தவரை இணைந்துகொள்கிறேன்.பதிவர் சந்திப்பு பயனுள்ளதாய் அமைய எமது வாழ்த்துக்கள்!!

    http://www.tamilnetwork.info
    உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி

    நன்றி.

    ReplyDelete
  39. நானும் வருகிறேன்

    ReplyDelete
  40. நானும் வருகிறேன்.

    ReplyDelete
  41. மயூரேசன் வந்தே தீருவார்... ;)

    ReplyDelete
  42. நானும் வருகிறேன்.

    ReplyDelete
  43. நானும் வருகிறேன்.

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. //முகிலினி said...

    நான் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிபவர்.

    So, நேரடி ஒளிபரப்பில் முடிந்தவரை இணைந்துகொள்கிறேன்.

    நேரலை இணைப்பை தந்ததற்கு ஏற்பாட்டு குழுவினருக்கு நன்றிகள்! & பதிவர் சந்திப்பு பயனுள்ளதாய் அமைய வாழ்த்துக்கள்!!
    //

    I didnt write this here. I wrote somewhere else but someone has copied & posted here.. argh.... whats wrong with these ppl... Its really annoying......

    ReplyDelete
  46. இல்லை... முகிலினி
    இதை எழுதியது நீங்களாகவே இருக்கும்.
    மேற்குறிப்பிட்ட அந்த பின்னூட்டத்தை உங்களால் நீக்க முடியுமா என பரிசோதித்துப் பாருங்கள்

    ReplyDelete
  47. பதிவர்களோடு சக பதிவராக என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  48. பதிவர் சந்திப்பு பயனுள்ளதாய் அமைய எனது வாழ்த்துக்கள்!!

    நேரடி ஒளிபரப்பில் இணைந்துகொள்கிறேன்.

    கார்த்திக்,
    www.honeytamilonline.co.cc/

    ReplyDelete
  49. என்னால் வரமுடியாது.. விடுமுறை என்பது எனக்கு குதிரைக் கொம்பாக இருக்கிறது.. இருந்தாலும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  50. நானும் வருகிறேன்...

    ReplyDelete
  51. நானும் வருவேன். இன்னுமொரு நண்பருக்கும் இடம் ஒதுக்கவும்

    ReplyDelete
  52. நானும் வருவேன்

    ReplyDelete
  53. Its my comment but I didnt post it here, Adirai... I cant delete it either. But, whn u click on it, it directs to my blog. Argh...however, Waiting to watch it online

    ReplyDelete