இவ்வினிய சந்திப்பு
571/15, காலி வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு-06 இல் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2 மணிமுதல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சென்ற சந்திப்பு குறித்த நேரத்திலும் பார்க்க 9 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்திருந்து. ஒப்பீட்டு ரீதியில் அது எங்களுக்கு நல்ல ஒரு பெயரைத் தக்க வைத்திருக்கிறது. இம்முறை குறித்த நேரத்திற்கே சந்திப்பு ஆரம்பித்து எமது பெயரைத் தக்கவைத்துக்கொள்ள பதிவர்களாகிய நாங்கள்தான் உதவப்போகின்றோம். பிற்பகல் 2 மணிக்கு முன்னமே வந்து இச்சந்திப்பை மகிழ்வாக்கிக் கொள்வோம்.
இம்முறைக்கான நிகழ்ச்சி நிரல் இதோ கீழே...
- - அறிமுகவுரை - 5 நிமிடம்
- - பதிவர்கள் அறிமுகம் --- பதிவர்கள் தங்களைப் பற்றிய சிறு அறிமுகம்
- - கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல் --- பதிவுகளின் தன்மை, எவ்வாறது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறதை மேம்படுத்துவது போன்றன.
- - கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை --- காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன
- - சிற்றுண்டியும் சில பாடல்களும் --- வாய்க்குச் சுவையாக சில பலகாரஙகள், செவிக்கினிமை சேர்க்க சில பாடல்கள்
- - கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு
- சிறப்பாகப் பயன்படுத்துவது? --- குழுமத்தை எவ்வாறு பாவிக்கவேண்டும், எவ்வாறு பாவிக்கக் கூடாது
- - கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும் --- பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் அதற்கான இருக்கக்கூடிய தீர்வுகளும்,
- - பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி --- கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள்அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்
- - உங்களுக்குள் உரையாடுங்கள் --- கதைக்க விடயம் இல்லையெனும் வரை பதிவர்கள் மாறி மாறித் தங்களுக்குள் கதைத்து, சிரித்து மகிழ்தல்
இலங்கைப் பதிவர்களே, இது பற்றித் தெரியாது இருக்கும் உங்களுக்குத் தெரிந்த பதிவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் அழைந்து வந்து இச்சந்திப்பை பயனுடையதாக்கி மகிழ்வோம்.
எங்களுடைய இனிய இச்சந்திப்பிற்கு நாங்கள் எல்லோரும் ஆளுக்கு நூறு ரூபாய்கள் செலுத்தி திறம்பட நாடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
இச்சந்திப்பானது கீழ்வரும் சுட்டியில் சமுகமளிக்கமுடியாத பதிவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காக நேரடி ஒளிபரப்பாக காண்பிக்கப் பட இருக்கிறது.
http://www.livestream.com/srilankatamilbloggers
இதுபற்றிய மேலதிக விபரங்களை எங்களது குழுமமாகிய இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தில் பார்ப்பதற்கு மேலுள்ள படங்களில் சொடுக்குங்கள். மேலும் இலங்கைப் பதிவராகிய நீங்கள் இன்னும் இக்குழுமத்தில் சேரவில்லையாயின் உடனடியாகச் சேர்ந்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் பயனுற ஈடுபடுங்கள்.
மேலும் இப்பதிவுக்கு உங்கள் பின்னூட்டத்ததினை இடுவதன்மூலம் உங்கள் வருகையினை உறுதிப்படுத்துங்கள்.
- இலங்கைத் தமிழப் பதிவர்